ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமான படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற போது ராட்சத கிரேன் விழுந்து மூவர் அகால மரணமடைந்தனர். அதன்பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவலாலும் படப்பிடிப்பு இதுவரையிலும் மீண்டும் ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இரண்டு படங்களை இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்துவிட்டார். தெலுங்குப் படம் அறிவிப்பு வந்த போதே, 'இந்தியன் 2' தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடுத்தது. தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று அவர்களது புகாரில் குறிப்பிட்டிருந்தது. ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு எதையும் சொல்ல முடியாது என நீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்தது.
இதனிடையே, நேற்று ஷங்கர் அடுத்து இயக்க உள்ள ஹிந்திப் படத்தின் அறிவிப்பும் வெளியானது. தற்போது லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாம். இதனால், ஷங்கர் வேறு படங்களை இயக்க சிக்கல் வர வாய்ப்புள்ளது.
'இந்தியன் 2' படத்திற்காக இதுவரையிலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் லைகா நிறுவனம் செலவு செய்துள்ளது. மேலும், சிலரது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேரின் உயிர்களும் பறிபோய்விட்டது. இவ்வளவு பிரச்னைகளுடன் தயாரிப்பு நிறுவனம் தவித்துக் கொண்டிருக்க, ஷங்கர் அவரை நம்பிய அவ்வளவு கோடி முதலீட்டை செய்த நிறுவனத்தை கைவிட்டு, வேறு படங்களை இயக்கப் போவது சரியா என திரையுலகில் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.