மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' மலையாளப் படம் பிப்ரவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்படத்தை உடனே தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்க 'த்ரிஷ்யம்' முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா மீண்டும் இரண்டாம் பாகத்திலும் ஜோடி சேர படப்பிடிப்பு ஆரம்பமானது.
கொரோனா பரவல் சூழ்நிலையிலும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி தற்போது இறுதிக்கட்டத்தில் வந்துவிட்டார்கள். இன்றுடன் இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை வெங்கடேஷ் முடிக்கிறாராம். 45 நாட்களுக்குள்ளாக அவரது படப்பிடிப்பு முடிவடைவது ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு படக்குழு தங்களது பணியை வேகமாகச் செய்துள்ளதாக டோலிவுட்டில் பாராட்டுகிறார்கள்.
மலையாளத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இரண்டாம் பாகம் தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கடேஷின் அடுத்த வெளியீடாக 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கான 'நரப்பா' வெளியாக உள்ளது.