ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற 13ந் தேதி முன்பு வெற்றி பெற்ற சில காதல் திரைப்படங்கள் ரீ ரிலீசாகிறது. அதில் டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி நடித்த 'உயிருள்ள வரை உஷா' படமும் வெளிவருகிறது.
இதனால் அந்த படத்தை பற்றிய பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த படத்தின் நாயகன் கங்கா என்ற நடிகன். அவருக்கு ஜோடியாகத்தான் நளினி அறிமுகமானார். பிற்காலத்தில் அவர் பிரபலமானார். ஆனால் மிக குறைந்த படங்களில் நடித்த கங்காவை பற்றி அதிகம் பகிரப்படவில்லை.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே கங்கா 'கடவுளுக்கு ஒரு கடிதம்' என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் 'கரையை தொடாத அலைகள், லட்சுமி வந்தாச்சு, தங்கமான ராசா, மீண்டும் சாவித்ரி' உள்ளிட்டட சில படங்களில் நடித்தார். சரியான வாய்ப்பு இல்லாததால் டி.ராஜேந்தர் அவரை தனது 'காதல் அழிவதில்லை' படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் கங்காவின் கடைசி படம்.
பின்பு சில சின்னத்திரை தொடர்களில் நடித்த கங்கா தனது 63வது வயதில் காலமானார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.




