கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? |

மலையாள இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கும் ஆழி படத்தில் சரத்குமார், இந்திரஜித், தேவிகா சதீஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். இதில் வையாபுரிக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் தாமரை. பக்கா ஹோம்லி கேரக்டரில் வருகிறார்.
படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் சினிமாவுக்கு புதிது. இது முதல் படம். இந்த பட நிகழ்ச்சியில்தான் முதலில் சினிமா மேடையில் ஏறினேன். நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன்பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது.
தமிழ் தவிர, மலையாளத்திலும் படம் உருவாகிறது. என்னை படப்பிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு நன்றி. நாடகத்தில் நடித்ததால் சினிமாவில் நடிக்க பயமில்லை. எனக்கு காமெடியான, அழுத்தமான வேடங்களில் நடிக்க ஆசை. குறிப்பாக மனோரமா ஆச்சி மாதிரி பல்வேறு கேரக்டரில் நடித்து, பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும்'' என்கிறார்.