இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சுந்தர் .சி இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ரஜினிகாந்த், சவுந்தர்யா, ரம்பா மற்றும் பலர் நடித்து 1997ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளிவந்த படம் 'அருணாச்சலம்'. இப்படம் இன்றுடன் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ரஜினிகாந்த்தின் மார்க்கெட் மிக உச்சத்தில் இருக்கும் போது வெளிவந்த படம். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர். சி இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்ட போதே ஆச்சரியப்பட்டனர் ரசிகர்கள்.
அதற்கு முன்பு நான்கு படங்களை மட்டுமே இயக்கி வளர்ந்து வந்த சுந்தர்.சிக்கு ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கமர்ஷியல் படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்படி கொடுத்தார்.
1975ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானதிலிருந்து 1995ம் ஆண்டு வரை 20 வருடங்கள் ரஜினி நடித்த படங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வெளியாகி வந்தது.
1995ம் ஆண்டில் அவர் நடித்த 'பாட்ஷா, முத்து' இரண்டுமே பெரிய வெற்றிப் படங்கள். 1996ம் ஆண்டு அரசியலில் ரஜினிகாந்த் கொடுத்த 'வாய்ஸ்' பரபரப்பாகப் பேசப்பட்டு அவரது தாக்கம் அரசியலில் பலமாக இருந்தது. அந்த ஆண்டில் அவர் நடித்து ஒரு படம் கூட வெளிவரவில்லை. அதுதான் அவருடைய திரையுலகப் பயணத்தில் முதல் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்தால் தான் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது என்று பேசப்பட்ட நிலையில் அதற்கடுத்த வருடம் வெளிவந்த படம்தான் 'அருணாச்சலம்'. எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும் 'பாட்ஷா, முத்து' ஆகிய படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் இப்படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
ரஜினியின் ஜோடியாக முதல் முறையாக சவுந்தர்யா, ரம்பா ஆகியோர் நடித்தனர். 1996 அரசியலில் ரஜினிகாந்தின் எதிராகக் கருத்து தெரிவித்தார் நகைச்சுவை நடிகை மனோரமா. அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைத்து தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார் ரஜினிகாந்த். சுந்தர் .சி அதற்கு முன் இயக்கிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும். அது 'அருணாச்சலம்' படத்திலும் தொடர்ந்தது.
இப்படத்தை ரஜினிகாந்த் அவரது சொந்த பேனரில் தயாரித்தார். திரையுலகில் அவருடன் பயணித்து வந்த எட்டு கலைஞர்களுக்கு உதவும் விதத்தில் இப்படத்தைத் தயாரிப்பதாக அறிவித்து அவர்களுக்கு உதவியும் செய்தார். ரஜினிகாந்தின் இந்த செயல் திரையுலகத்தினராலும், அவருடைய ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்த சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அப்படியான படங்களின் வரிசையில் இன்று 25வது வருடத்தைக் கொண்டாடும் 'அருணாச்சலம்' படத்திற்கும் ஒரு இடமுண்டு.