'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வருட காலமாக கட்டுப்படுத்த முடியாமல் மக்களைத் திண்டாட வைத்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் நவம்பர் மாதம் திறக்கப்பட்ட போது குறைவான மக்கள் வருகையால் திண்டாடியது.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கைகளில் வசூலைக் குவித்தது. அதன்பின் மீண்டும் மக்கள் வருகை குறையவே தியேட்டர்காரர்கள் திண்டாடினர். வாரத்திற்கு வாரம் படங்கள் வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அடிக்கடி காட்சிகளை ரத்து செய்யும் நிலை எற்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வெளிவந்தது. நேற்று தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
'கர்ணன்' படம் நேற்று வெளிவந்தாலும் கடந்த வாரம் வெளியான 'சுல்தான்' படம் இந்த வாரத்திலும் தியேட்டர்களில் தொடர்கிறது. இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் தாக்கம் எப்படியிருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரியும். இருந்தாலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் தப்பித்துவிடும் என்கிறார்கள்.