நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
சென்னை: ராஜா தயாரித்து, இயக்கி நடித்துள்ள, மாவீரன் பிள்ளை படம் வாயிலாக, மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, நடிகையாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பவராக அவர் நடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: இது, ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல. கூத்து கலைஞர்கள், போலி காதல், மது விலக்கு, விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்களை, இப்படத்தில் பேசியுள்ளோம். அப்பாவின் கதைக்கும், மாவீரன் பிள்ளை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது படம் வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால், அவரது, கெட்டப்பில் உள்ள என் படம், போஸ்டரில் வந்தது.
அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், நிச்சயம் செய்வேன். இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன். அப்பாவின் உண்மையான கதை, இன்னும் படமாக்கப்படவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்து தான், வீரப்பனின் வாழ்க்கை கதையை, படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம், காட்டில் இருக்கிறது; ஆனால், இப்போது அது செல்லாது. எங்கு இருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது. அது, அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.