நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார். விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி. தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', ராம்சரண் ஜோடியாக 'ஆச்சார்யா', விஜய் ஜோடியாக தமிழில் என டாப் படங்களின் ஹீரோயினாக இருக்கிறார்.
அடுத்து அவரை தெலுங்கு, தமிழில் மேலும் புதிய படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம். அதனால், தன்னுடைய சம்பளத்தை இன்னும் கூடுதலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள படத்திற்காக அவரை அணுகிய போது பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டாராம். அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மிக வேகமாக பூஜா ஹெக்டேதான் முன்னேறி வருகிறார் என்கிறார்கள்.