ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்ற அதாவது த்ரிஷா நடித்த ஜானகி என்ற ஜானு கேரக்டர் மிகவும் பிரபலம். படத்தில் சின்ன வயது ஜானுவாக நடித்தவர் கவுரி கிஷன். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கவுரி கிஷனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக கவுரி கிஷன் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியிருப்பதை எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளுக்குத் தெரிவிக்கவே இதைப் பதிவிடுகிறேன். கடந்த வாரத்திலிருந்து நான் வீட்டுத் தனிமையில், நல்ல கவனிப்பில் இருக்கிறேன்.
மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றித் தேறி வருவதால் கவலைப்பட எதுவுமில்லை. முழுமையாக குணமாகும் வரை நான் பொறுமையாகக் காத்திருந்து, ஓய்வெடுத்து, உங்கள் அத்தனை பேரின் அன்பான வாழ்த்துகளையும் படிக்கப் போகிறேன். ஏனென்றால் அவற்றுக்குக் கண்டிப்பாகப் பலன் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பில் இருந்திருந்தால், அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தால் தயவு செய்து உங்களைப் பரிசோதித்து, கிருமி தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையானதைச் செய்து கொள்ளுங்கள். என்று எழுதியிருக்கிறார்.