ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது நடிப்பில் மூலம் அடுத்தடுத்த உயரங்களை தொடுகிறவர். சமீபத்தில்கூட மணிகர்னிகா படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார். இதுதவிர அவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
ஜெயலலிதா போன்றே மாறி உள்ள அவரது நடிப்பை டீசரில், வெளியிடப்பட்ட பாடல்களில், புகைப்படங்களில் பார்த்து அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு நடிகையும் அவரை பாராட்டவில்லை. இதுகுறித்து கங்கனா வருத்தத்துடன் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
இந்தத் துறையில் நான் ஆதரிக்காத, பாராட்டாத ஒரு நடிகை கூட இல்லை. ஆனால், அவர்கள் யாருமே எனக்கு வாழ்த்தோ, ஆதரவோ கூறியதில்லை. அவர்கள் ஏன் எனக்கு எதிராகத் திரள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் திரைப்படங்களின் திரையிடலுக்கு என்னைத் தொலைபேசியிலோ, நேரடியாகவோ வரச் சொல்வார்கள். நானும் செல்வேன். எனக்குப் பூக்கள் தந்து செல்லமே என்று கொஞ்சுவார்கள். ஆனால், எனது படத்தின் திரையிடல்களுக்கு அழைக்க முற்படும்போது எனது அழைப்புகளை எடுக்கவே மாட்டார்கள். இன்று நான் ஒவ்வொரு நாளும் அவர்களை ஆட்டுவிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான். என்று கங்கனா எழுதியுள்ளார்.