பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? |

நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'வைல்டு டாக்' என்கிற படம் இன்று(ஏப்., 2) வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினி பீல்டில் இருந்தாலும் இப்போதும் அவருக்கு முதல் படம் ரிலீசாவது போலவே பதட்டம் ஏற்பட்டு விடுகிறதாம்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் நாகார்ஜுனா.. அவருக்கு விதவிதமான உணவு வகைகளை தன் கையாலேயே சமைத்து சாப்பிட வைத்த சிரஞ்சீவி, கலகலப்பாக பேசி நாகார்ஜுனாவின் டென்சனை போக்கி, அவரை கூல் பண்ணி அனுப்பி வைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து, அவர் மனைவி சுரேகா தங்கள் இருவரையும் இணைத்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜுனா.