போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67ஆவது தேசிய விருது பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அந்த வகையில் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் நடித்து ஏற்கனவே தேசிய விருது பெற்றிருந்த தனுஷிற்கு இந்த அசுரன் மூலம் இரண்டாவது விருது கிடைத்தது.
இந்நிலையில், தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்தபடியாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். மேலும், சூர்யா படத்தை முடித்ததும் விஜய் நடிக்கும் படத்தை தான் இயக்கயிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். மேலும், ஏற்கனவே விஜய் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அப்போது வேறு சில படவேலைகளில் இருந்ததால் அது நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
வாடிவாசல் படத்தை இயக்கியதும் விஜய் படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்புள்ளது.