மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நடிகர் பிரித்விராஜை தொடர்ந்து, அடுத்ததாக தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் மோகன்லால். ஆனால் அவரைப்போல கமர்ஷியல் ஆக்சன் கதையில் இறங்காமல் 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற, குழந்தைகள் ரசிக்கும் விதமான வரலாற்று படத்தை தான் இயக்குகிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்ற நிலையில், இதன் படப்படிப்பையும் தாமதமின்றி துவங்கி விட்டார் மோகன்லால். அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகிறது. ஆனால் முதலில் 2டியில் எடுத்து பின்னர் 3டிக்கு மாற்றாமல், 3டி கேமரா மூலமாகவே காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான, 3டியில் உருவான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய, ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்துவைத்த சொத்துக்களை, பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்.