காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த சுராஜ், இயக்குனராக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படத்தில் தான் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். இதில் வடிவேலு, தன்னைத்தானே தாதாவாக கருதிக் கொள்ளும் வேடத்தில் நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலமானது. அதன்பிறகு சுராஜ் இயக்கிய மருதமலை, கத்தி சண்டை படங்களிலும் வடிவேலு நடித்தார். இந்த படங்களின் காமெடி காட்சிகளும் பிரபலமானது.
கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வடிவேலு, சமீபத்தில் ஒரு நிகழ்வில் கூட உங்களுக்கெல்லாம் ஓராண்டு தான் லாக்-டவுன், எனக்கு 10 ஆண்டு என உருக்கமாக பேசினார். தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதனை சுராஜ் இயக்குகிறார். தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் கேரக்டரையை பெரிதாக்கி இந்த படத்தை உருவாக்க இருக்கிறார்கள். படத்திற்கும் நாய்சேகர் என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.