Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய நடிகை சுகாசினி

28 மார், 2021 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Suhasini-campaign-for-Kamalhaasan

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீனிவாசனும் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக குஷ்பு, நமீதா, கவுதமி, விந்தியா, ராதாரவி, செந்தில் என பல திரையுலகினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல் கமலுக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், தற்போது கமலின் அண்ணன் மகளான நடிகை சுகாசினியும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கமல் கட்சியின் சின்னமான டார்ச்லைட்டை கையில் வைத்துக்கொண்டு சுகாசினி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபடாத சுகாசினி, முதன்முறையாக தனது சித்தப்பா கமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாகும் காமெடி நடிகர் சதீஷ்?ஹீரோவாகும் காமெடி நடிகர் சதீஷ்? இதற்கு தான் இவ்வளவும்... இதற்கு தான் இவ்வளவும்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

29 மார், 2021 - 08:59 Report Abuse
கண்ணோட்டம் எந்தக் கட்சியும் யோக்கியமான கட்சி கிடையாது! எந்த அரசியல்வாதியும் யோக்கியமான அரசியல்வாதி கிடடயாது. நேரு, கலைஞர், புரட்சித்தலைவர் வைத்திருக்காததையா கமல் புதிதாக வைத்திருக்கப் போகிறார்! கமல் நாட்டிற்கு நல்லது செய்வாரா என்பதுதான் கேள்வி! அதை விவாதிக்க இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளுக்கு தகுதி இருக்கிறதா, திராணி இருக்கிறதா என்பது இன்னொரு கேள்வி! அதற்குத்தான் தேர்தல்!
Rate this:
s vinayak - chennai,இந்தியா
28 மார், 2021 - 18:04 Report Abuse
s vinayak குடும்ப அரசியலின் துவக்கம். எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.
Rate this:
saravan - bangaloru,சவுதி அரேபியா
28 மார், 2021 - 16:57 Report Abuse
saravan அவுகளை வச்சிருந்தாக இவுகளை வச்சிருந்தாக அங்க வச்சிருந்தாக இங்க வச்சிருந்தாக... இப்படி பாட்டு பாடியே ஒட்டு கேட்கலாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in