சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'கஜினி, ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்தன. அந்தக் கூட்டணி கடந்த 10 வருடங்களாக மீண்டும் இணையாமல் உள்ளது. விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் முதலில் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மீண்டும் அவரும் சூர்யாவும் இணையும் படமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய படமாக உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போகிறார். அவற்றை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.