பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்தவர் துஷாரா. போதை ஏறி புத்தி மாறி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்புள்ள கில்லி, படத்திலும் கண்ணம்மா என்ற குறும்படத்திலும் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் சர்பேட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இது குறித்து நடிகை துஷாரா கூறியதாவது: இயக்குநர் பா ரஞ்சித். சமூக வலைதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்து விட்டு, என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, எனக்கு சரளமாக தமிழ் பேச வருமா என கேட்டார். திறமையும், தமிழ் மொழியும் எனக்கான வாய்ப்பை பெற்று தந்தது.
ஆடிசனில் என்னிடம் சில விசயங்கள் செய்து காட்டும்படி கூறினார்கள். என்னால் முடிந்த அளவு வேகமாக கத்தும்படி கேட்டார்கள். நான் செய்து முடித்த அடுத்த நொடி, இயக்குநர் ரஞ்சித் அவர்கள் “ஓகே நீ இப்படத்தில் நடிக்கிறாய்” என்று கூறினார். அதன்பிறகு படத்தின் உணர்பூர்வமான காட்சி ஒன்றை நடித்து காட்டும்படி கேட்டார்கள். அது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
மாரியம்மாள் எனும் எனது கதாப்பாத்திரம், வாய்த்துடுக்கு மிகுந்த, தைரியமிக்க அழுத்தமான பெண் கதாப்பாத்திரம் ஆகும். நான் சரளமாக தமிழ் பேசினாலும் டப்பிங்கில் வட சென்னை மொழி வழக்கை, கையாள்வது கடினமாக இருந்தது.
படத்தின் படப்பிடிப்பின் போது ஒருமுறை இயக்குநர் வசந்தபாலன் படப்பிடிப்பை பார்வையிட்டார், பின் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி கூறினார். அதன் பின் அவரது படத்தில் நடிக்கும் என் கனவு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தில் அர்ஜீன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். நான் சுப்புலக்ஷ்மி எனும் மரியாம்மாளுக்கு நேரெதிர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.
தமிழ் பேசும் திறமையுள்ள நடிகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைப்பது மனதிற்கு மிகபெரும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு சினிமா மீது தீவிரமான காதலும், நல்ல திறமையும் இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு உங்களை கண்டிப்பாக வந்தடையும், நீங்கள் கண்டிப்பாக கவனிக்கப்படாமல் போக மாட்டீர்கள். எந்த ஒரு படத்திலும் சவால் தரும் பாத்திரங்களை செய்யவே நான் விரும்புகிறேன். வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக பார்வதி திருவோது, நயன்தாரா போல மிளிரவே ஆசைப்படுகிறேன் என்றார்.