பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. சமீபகாலமாக இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.