பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் நடித்த அர்ஜுன் தாஸ், பின்னர் வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் ஹீரோ ஆகிவிட்டார். அதன்பிறகு போர், ரசவாதி போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் அஜித் நடித்த குட் பேட் அகலி படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இனிமேல் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார் அர்ஜுன் தாஸ். என்றாலும் லோகேஷ் கனகராஜ் அழைத்தால் கண்டிப்பாக மீண்டும் வில்லனாக நடிப்பேன். குறிப்பாக அவர் கதை கூட எனக்கு சொல்ல வேண்டியதில்லை. சினிமாவில் எனக்கு அடையாளத்தை கொடுத்தவர் என்பதினால் அவர் எப்படிப்பட்ட வேடத்தில் நடிக்க சொன்னலும் கண்ணை மூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் நடிப்பேன் என்கிறார் அர்ஜுன் தாஸ்.




