ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெய்ராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரிலீஸூக்கு தயாராகி ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும், இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரங்கள் தேங்கி நிற்பதால் இப்படம் ரிலீஸூக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதற்கிடையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான 'தலைவன் தலைவி' படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் தாணு இப்போது டிஜிட்டல், சாட்டிலைட் சம்மந்தப்பட்ட நிறுவனங்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தை முடிந்த அளவிற்கு இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.




