வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான 'அர்ஜுன் சக்ரவர்த்தி' வேகமாக வளர்ந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் வேணு கே சியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கன்னெட் செல்லுலாய்டு நிறுவனத்திற்காக ஸ்ரீனி குப்பலா தயாரிக்கிறார்.
புதுமுகங்களான விஜய ராம ராஜூ மற்றும் சிஜா ரோஸ் நடிக்கும் இந்தப் படத்தில், அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். விக்னேஷ் பாஸ்கரன் இசை அமைக்கிறார், ஜெகதீஷ் சீகட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 2 வருடங்களாக தயாரிப்பில் உள்ள இந்தப் படம் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள 125 இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படம் பற்றி இயக்குனர் வேணு கே.சி.கூறியதாவது: அர்ஜூன் சக்ரவர்த்தியின் குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான தோற்றத்தை சரியாக வெளிப்படுத்துவதற்காக பல்வேறு உருவ மாற்றங்களுக்கு கதாநாயகன் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கதை நடக்கும் காலத்தை மிகச்சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக 1960 மற்றும் 1980களில் இருந்த கிராமங்கள் மற்றும் ஹைதராபாத் நகரம் ஆகியவை கலை இயக்குநர் சுமித் படேல் தலைமையிலான குழுவால் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி மற்றும் பணிகளுக்காக மட்டுமே இரண்டு ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளன.
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் அர்ஜுன் சக்ரவர்த்தியை இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.