மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு |
நடிகை துஷாரா விஜயன் தமிழில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கழுவேத்தி மூர்க்கன், ராயன், வேட்டையன் ஆகிய படங்களில் துஷாரா விஜயன் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
தற்போது சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமாக 'வீர தீர சூரன்' 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ், சித்திக் ஆகியோருடன் இணைந்து துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நேற்று துஷாரா விஜயன் பிறந்த நாளை இப் படத்திலிருந்து துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.