ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் தனது 40வது படத்தில் நடிக்கின்றார். இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார், நடிகைகள் தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா ஆர்ச்சர் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகனான அம்ரித் ராம்நாத், மலையாளத்தில் பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் இடம்பெற்ற 'நியாபகம்' பாடலுக்கு இசையமைத்திருந்தார். அப்பாடல் வரவேற்பை பெற்றிருந்தது. அவர் முதன்முறையாக தமிழ் படத்தில் அறிமுகமாகியுள்ளதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.