இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
ஒரு காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர், 80களில் வியாபார நோக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்கினார். காதல், ஆக்ஷன் இந்த இரண்டும் அவரது பார்முலாவாக இருந்தது. அப்படி அவர் இயக்கிய படம்தான் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தை கே.ஆர்.ஜி தயாரித்திருந்தார்.
ஒரு சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து இந்த படத்திற்கு இசை அமைக்கச் சொன்னார். ஆனால் முதலில் அவர் மறுத்தார். காரணம் தயாரிப்பாளர் கேஆர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பே 'நீங்கள் இசை அமைத்தால் முதல் படமாக எனது படம் இருக்க வேண்டும்' என்றார். அதற்கு பாலசுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டிருந்தார். இதை கூறியே அவர் மறுத்தார்.
அப்படியென்றால் இந்த படத்திற்கு கேஆர்ஜியை தயாரிப்பாளராக்கி விடுகிறேன் என்று சொல்ல அப்படியே நடந்து, படம் தயாரானது. ஒரு கொடுமைக்கார எஸ்டேட் முதலாளிக்கும் அங்கு பணியாற்றும் ஊழியருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றது. அத்தனை பாடல்களும் ஹிட்டானது. என்றாலும் பாடல்களில் தெலுங்கு வாசனை அடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.