புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், மூத்த எழுத்தாளர்களை பாராட்டி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனுக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த வரிசையில் தற்போது திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்திருக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கும் பாராட்டு விழா நடத்துகிறது.
'முத்துக்கு முத்தான விழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா நாளை (29ம் தேதி) மாலை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், துணை தலைவர்கள் ரவிமரியா, யார் கண்ணன், செயலாளர் லியாகத்தலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முத்துலிங்கம் 1973ம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் . அதன்பிறகு 47 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.