ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மெய்யழகன்'. அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஸ்பேசில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, " வா வாத்தியார் திரைப்படத்தை அடுத்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என தெரிவித்தார்.