ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
இயக்குனர் ஏ.பீம்சிங்கின் 100வது பிறந்தநாள் இன்று. அதனை நினைவுகூறும் வகையில் நடிகர் பிரபு நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பா சிவாஜி, அவரை பீம் பாய் என்றுதான் செல்லமாக அழைப்பார். அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். அவரை 'செந்தாமரை' படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து 'அம்மையப்பன்', 'ராஜா ராணி' படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய 'பதி பக்தி' படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா நடிப்பில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, சாந்தி, பாலாடை, பாதுகாப்பு போன்ற 19 படங்களை இயக்கினார்.
அவர், சாந்தி படத்தின் ஹிந்தி பதிப்பை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சுனில்தத் நடிப்பில் 'கௌரி' என்கிற பெயரில் இயக்கினார். அதே போல சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 'பாசமலர்' படத்தை ஹிந்தியில் 'ராக்கி' என்கிற பெயரில் அசோக்குமார் நடிப்பில் இயக்கினார்.
இப்படி தமிழ் படங்களின் பெருமையை ஹிந்தி வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குனர் பீம்சிங். காலத்தால் அழியாத பல காவிய படங்களை தந்தவர். குடும்பக் கதைகளின் எதார்த்த இயக்குனர். காட்சிகளில் எளிமை, வசனங்களில் புதுமை, பாடல்களில் இனிமை, தமிழ் சினிமாவின் ஆளுமை என்று திகழ்ந்தவர். அவருக்கு இன்று 100வது ஆண்டு என்கிற போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கொண்டாடி மகிழ்ந்திருப்பார். காலம் என்னவோ அவர்களை எடுத்துக் கொண்டுவிட்டது.
ஆனால், அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை; படைத்தவருக்கும் அழிவில்லை. கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள். அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பீம்சிங்கும் அய்யாவும் நமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு நடிகர் பிரபு கூறியுள்ளார்.