'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு சென்றுள்ளார் பிரபு. ஏற்கனவே அஜித்துடன் இணைந்து பிரபு பில்லா, அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து ஏற்கனவே யோகி பாபு வேதாளம்,விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அஜித்தின் நியூ லுக்
இதனிடையே குட் பேட் அக்லி படத்தின் அஜித்தின் தோற்றம் கொண்ட புதிய லுக் உடனான போட்டோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித் எடையை குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி உள்ளார்.