பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் விக்ரம் பிரபு, எல்.கே அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள “சிறை” படம் வரும் டிசம்பர் 25 ல் ரிலீஸ் ஆகிறது. ‛டாணாக்காரன்' இயக்குனர் தமிழ், தான் சந்தித்த அனுபவத்தை வைத்து, பல உண்மை சம்பவ பின்னணியில் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு போலீசாக நடிக்க, அவர் ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமார் மகன் எல்.கே அக்ஷய் குமார் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்போது புதிய போஸ்டருடன் பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.