ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகை துஷரா விஜயன். சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற சில படங்களில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் துஷரா விஜயன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, " நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தனுஷின் தீவிரமான ரசிகை. தற்போது அவரின் இயக்கத்தில் அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் குறித்து பரப்பி வரும் கிசுகிசுக்களும், குற்றச்சாட்டுகளும் என அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர்; அவர் நடிப்பின் மீது அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார்". என இவ்வாறு தெரிவித்தார்.