'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா | ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் |

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் என புதுமையாக செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் பெரும்பாலான படங்களில் ஒரு முக்கிய காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
குறிப்பாக ஜிகர் தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களில் சிங்கிள் டேக்கில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கினார். தற்போது இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தினை இயக்கியுள்ளார். இதில் 15 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியுள்ளனர். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் செய்துள்ளனர்.




