2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகை ஹன்ஷிகா மோத்வானி சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவருக்கும் உறவுகார பெண்ணான முஷ்கனுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நட்சத்தி ஓட்டலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த ஆடை அணிந்து கலந்து கொண்டார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக 3 நாட்களாக நடந்த திருமண விழா கொண்டாட்டங்களில் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஹன்ஷிகா மோத்வானியின் தாயார் டாக்டர் மோனா மோத்வானி, மற்றும் நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறவுகள் பங்கேற்றனர். திருமண நிகழ்வுகள் அனைத்தும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, நடைபெற்றது.
அண்ணன் திருமணம் குறித்து ஹன்சிகா கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் மிகப்பெரும் கொண்டாட்ட நிகழ்வு, வாழ்வின் மறக்க முடியாத தருணம், அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. என் குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினராக முஷ்கான் இணைந்துள்ளார். நாங்கள் தற்போது இணைபிரியா சகோதரிகள் ஆகிவிட்டோம். இரண்டு இனிய இதயங்கள் வாழ்வில் ஒன்றாக இணைந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. என்றார்.