ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரின் சம்பளத்தை அவர் கடந்துவிட்டார். 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து 2023ம் ஆண்டில் 'சலார்' படத்தை இயக்கி வரும் 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.
சில வருடங்களுக்கு முன்பே பெரிய தொகை ஒன்றை அவர் பிரபாஸிடம் அட்வான்ஸாக கொடுத்திருந்தாராம். சரியான இயக்குனர் கிடைக்காத காரணத்தால் அப்படம் தள்ளிக் கொண்டே வந்ததாம். இப்போது பிரஷாந்த் நீல் தான் சரியான இயக்குனர் என பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அந்தப் படமும் மற்ற படங்களைப் போல 'பான் இந்தியா' படமாகத்தான் உருவாகப் போகிறதாம்.




