பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழ்த் திரையுலகை புதிய இளமைப் புயல் ஒன்று அடுத்த மாதம் தாக்க வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ள ராஷ்மிகா மந்தானா தான் அந்தப் புயல்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது துறுதுறு நடிப்பால் எண்ணற்ற இளம் ரசிகர்களைப் பெற்றவர் ராஷ்மிகா. இன்று சென்னையில் நடைபெற்ற 'சுல்தான்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தட்டுத் தடுமாறி தமிழில் பேசினார். அவர் பேசுவது புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அவர் பேசும் போது சிரிப்பதையே ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்ல, வந்ததிலிருந்து கிளம்பும் வரை துறுதுறுவென அவர் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நஸ்ரியா நசீம் வந்தார். சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.
அவரது வரிசையில் வர உள்ள ராஷ்மிகா இன்று பேசும் போது, தயாரிப்பாளர் பிரபுவிடம் அடுத்த படமும் சைன் பண்ண ரெடி என இப்போதே அவரது தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழ் மக்களை காதலிக்கிறேன். சுல்தான் படம் புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
சீக்கிரமே ராஷ்மிகாவின் அடுத்த தமிழ்ப் பட அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.