பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஒரு புதிய படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்து அந்தப் படத்தின் வருவாயைக் கெடுத்து வருகிறது. காலம் காலமாக நடந்து வரும் இந்தத் திருட்டிற்கு இதுவரை எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை.
டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற பைரசி லின்க்குகள் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி, ராஷ்மிகா நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் பைரசி லின்க்கை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்' படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லின்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.