'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இதுதவிர விஜய் உடன் ‛ஜில்லா' படத்தில் அவரின் தங்கை வேடத்தில் நடித்தார். ‛நவீன சரஸ்வதி சபதம், போராளி' போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். தெலுங்கில் நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள ‛பிங்க்' தெலுங்கு ரீ-மேக்கான ‛வக்கீல் சாப்' படத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், ‛‛தனக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும், தன்னை தனிமைப்படுத்தி வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதிலிருந்து சீக்கிரம் குணமாகி வந்துவிடுவேன். அனைவரின் அன்புக்கும் நன்றி. குறிப்பாக எனது மருத்துவ குழுவிற்கு நன்றி. அனைவரும் கவனமாக இருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்'' என தெரிவித்துள்ளார் நிவேதா.