'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கிராமத்திலிருந்து ஒரு பெண் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் எப்படி இடம் பிடித்து சாதிக்கிறார் என்பதுதான் கதை.
தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை ஹிந்தியில் 'நாட் அவுட்' என்ற பெயரில் டப்பிங் செய்து யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள். கடந்த மாதம் யூ டியுபில் வெளியான இந்தப் படம் அதற்குள்ளாக 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்படும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளின் படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியம்தான். கிரிக்கெட் படம் என்பதால் வட இந்தியர்களும் இப்படத்தை அதிகம் ரசிக்கிறார்கள் போலிருக்கிறது.