கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான கிராக் படமும், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக மாஸ்டர், உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு நெருக்கமாகவே மாறியுள்ளார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் ரவிதேஜாவும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'ட்ரைவிங் லைசென்ஸ்' படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது.
கடந்த 2019ல் மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் தேசிய விருது பெற்ற நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாராமுடு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் ட்ரைவிங் லைசென்ஸ். அய்யப்பனும் கோசியமும் புகழ் டைரக்டர் சாச்சி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதி இருந்தார். பிரபல சினிமா ஹீரோவான பிரித்விராஜூக்கும் அவரது தீவிர ரசிகரான மோட்டார் வாகன அதிகாரி சுராஜ் வெஞ்சாராமுடுவுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் ஈகோ யுத்தத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இதில் பிரித்விராஜ் கேரக்டரில் ரவிதேஜாவும், மோட்டார் வாகன அதிகாரி கேரக்டரில் விஜய்சேதுபதியும் நடிக்க இருக்கிறார்களாம்.