'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தியேட்டர்களுக்கு நேரடியாக சென்று, வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்கு, ஆன்லைன் புக்கிங் என்பது ஒரு வரப்பிரசாதம் தான்.. ஆனால் அதையே சாக்காக வைத்து படத்தின் டிக்கெட் கட்டணத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத தொகையை, இணையதள சேவை கட்டணம் என்கிற பெயரில் வசூலித்து வருகின்றன ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள்.. இதில் குறிப்பிட்ட அளவு பங்குத்தொகை கிடைப்பதால், இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக டிக்கெட் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ரூபாய் புக்கிங் கட்டணமாக வசூலித்தனர். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக சூழல் மாறியுள்ளதால், அதில் சற்று குறைத்து அதிகபட்சமாக 28 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்தநிலையில் ஆந்திராவை சேர்ந்த விஜயகோபால் என்பவர், இந்த ஆன்லைன் கட்டணம் என்பது பகல் கொள்ளை, வாடிக்கையாளர்களின் உரிமையை மீறும் செயல் என்று கூறி, ஐதராபாத் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்படி கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களில் ஒன்றான 'புக் மை ஷோ' நிறுவனத்தின் மீதும் இந்த கட்டண கொள்ளைக்கு உடந்தையாக செயல்படுவதாக பிவிஆர் சினிமா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் புக்கிங் நிறுவனமான 'புக் மை ஷோ' மற்றும் பிவிஆர் சினிமா ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராத தொகை விதித்துள்ளது, மேலும் பாதிக்கப்பட மனுதாரர் விஜயகோபாலுக்கு ரூ.25000 நஷ்ட ஈடாகவும் ரூ.1000 வழக்கு செலவு தொகையாகவும் கொடுக்கும்படி இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று விஷயங்களில் 6 ரூபாய்க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் கூறியுள்ளது.