'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஒருவழியாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதேப்போல நடிகர் மோகன்பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள 'மொசகல்லு' படத்தை தயாரித்து, புரமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி விட்டார். வரும் மார்ச்-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்பாபு இருவரும் கோடை விடுமுறையாக சிக்கிம் கிளம்ப தயாராகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒருசேர புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. மேலும், “நண்பர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பிவிட்டார்கள்.. நீங்கள் மட்டும் ஜாலியாக கிளம்புகிறீர்களே, குழந்தைகளாகிய எங்களையும் ஏதாவது ஒருநாள் அழைத்து செல்லக்கூடாதா..?” என ஏக்கத்துடன் கேட்டுள்ளார்.