விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஆகாடு என்ற படத்தில் நடித்த தமன்னா அதன்பிறகு சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் படத்திற்காக அல்ல, ஒரு விளம்பர படத்திற்காக. இந்த விளம்பர படத்தை அர்ஜூன்ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார். இந்த விளம்பர படம் இன்னும் ஒரு மாதத்தில் டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், படங்களை விடவும் இதுபோன்ற விளம்பர படங்களில் தான் அதிகமாக சம்பாதித்து வருகிறார் மகேஷ்பாபு. இந்திய அளவில் விளம்பர படங்கள் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் நடிகர்களில் மகேஷ்பாபுவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்.