ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சமீபகாலமாக நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட பலரை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வந்தவர் நடிகை மீரா மிதுன். குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா, சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றியும் தவறான செய்திகளை வெளியிட்டார். இதனால் மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீரா மிதுனுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வந்தனர். அவரது இந்த செயலுக்கு டைரக்டர் பாரதிராஜாவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து சோசியல் மீடியாவில் பிரபலங்கள் பற்றி அவதூறு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வந்த மீரா மிதுன், சில வாரங்களுக்கு முன் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்ய போகிறேன் என கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னை கொலை செய்வதற்கு 8 பேர் கொண்ட ஒரு கும்பல் துரத்துவதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.
தற்போது சோசியல் மீடியாவில் மற்றுமொரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீராமிதுன். அதில், ''விஜய், சூர்யாவைப் பற்றி தான் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதோடு தான் அப்படி பேசியதற்கு அப்சரா ரெட்டி என்ற ஒரு திருநங்கைதான் காரணம். அவர் அதிமுக பிரமுகர் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார் மீரா மிதுன்.
மேலும், இப்படி தன்னை குழப்பி விட்டு விஜய், சூர்யாவை அவதூறாக பேச வைத்த அப்சரா ரெட்டியை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியை கேட்டுக் கொண்டுள்ள மீரா மிதுன், தனக்கு திரையுலகினர் சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் தர வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.