டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள 'மொசகல்லு' படத்தில் சுனில் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் மார்க்-19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு நடைபெற்ற இந்தப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் ராணா. .
கட்டுக்கோப்பான உடல்வாகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் நடிகர் ராணா டகுபதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தான் ஏழாவது படிக்கும்போதிருந்தே ஜிம்மிற்கு செல்லும் ஆர்வத்தை தூண்டியவர் சுனில் ஷெட்டி தான்.. அவரது மோஹ்ரா படத்தை பார்த்ததில் இருந்து தான் உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் தோன்றியது என கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடித்தது பற்றி சுனில் ஷெட்டி கூறும்போது, “மோகன்பாபு குடும்பத்தில் இருந்து இந்த அழைப்பு வந்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டில் இருந்து தான் எனக்கு விதவிதமான உணவு வந்தது. இதோ இப்போது மும்பைக்கு திரும்பி செல்லும்போதுகூட, அவர்கள் வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய மீன்கறி தயாராக இருக்கிறது” என பேசினார்.




