23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
சென்னை: அரியவகை இரிடியத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தருவது போல நடித்து, தொழில் அதிபரிடம், 26.20 கோடி ரூபாய் சுருட்டிய நடிகை ஜெயசித்ராவின் மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயசித்ரா 60. நடிகையான இவர், குறத்தி மகன், அரங்கேற்றம் உட்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவரது கணவர் கணேஷ், 62. தொழில் அதிபரான இவர், 2020, டிச., 4ல் இறந்தார். இவர்களது ஒரே மகன் அம்ரீஷ், 33; இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன் தாய் இயக்கிய, நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அம்ரீஷ்க்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, நெடுமாறன், 68 என்பவருக்கும், 2013ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகள், தங்களிடம் அரியவகை இரிடியம் உள்ளது. இதை மலேஷியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது. எங்களுக்கு, 26.20 கோடி ரூபாய் கொடுத்தால் போதும். மீதி தொகை முழுதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என, நம்ப வைத்துள்ளனர்.
மேலும், தங்களிடம் இருப்பது அரியவகை இரிடியம் தான் என்பதை, கனடா ஆய்வகம் உறுதி செய்து சான்று அளித்து இருப்பதாக, ஆவணத்தை காட்டியுள்ளனர். இவரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கூட்டாளிகள் வாயிலாக, நட்சத்திர ஓட்டலில் அந்நாட்டு நிறுவன பிரதிநிதிகள், அரியவகை இரிடியத்தை, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இதை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகளிடம், 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மலேஷிய நிறுவனத்திடம் இருந்து பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுமாறன், நடிகையின் மகனை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது பற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை பிடித்து, விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்தனர்; கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.