அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் தான் கொரோனா தொற்று உருவானது. இதனால் 20 சதவிகித படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் மீண்டும் அண்ணாத்த படபிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாளிலேயே படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார். அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை அதை செய்வேன் என்றார்.
இந்த நிலையில் கொரோனா 2வது அலை பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதால் அதற்கு முன்னதாக படத்தை முடித்து விட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கு ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாளில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
கடுமையான கட்டுபாடுகள், மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே பணியாளர்கள் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். படத்தின் வெளிப்புற காட்சிகளையும் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கி தமிழ்நாட்டுக்குள்ளேயே படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.