டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலை பொழுது, மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. விஜய் சேதுபதியுடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது வெள்ளராஜா, பிங்கர்டிரிப் வெப் சீரிஸ்களில் நடித்தார். தற்போது ஐ ஹேட் யூ லவ் யூ என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படத்தில் காயத்ரி நடிக்கிறார். இதில் அவர் குஞ்சாகோ போபன் ஜோடியாக நடிக்கிறார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் போன்றே இதுவும் காமெடி கலந்த செண்டிமென்ட் படமாக உருவாகிறதாம்.




