தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா நடிகைகளை விட மவுசு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றார்போல் சீரியல் நடிகைகளும் சோஷியல் மீடியாவில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். அதில் அவர்களுக்கு அடிஷனல் போனஸாக விளம்பரங்களுக்கான வாய்ப்பும் எளிதாக கிடைக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாவில் போட்டோஷூட்களின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகைகளில் ஜனனி அசோக்குமாரும் ஒருவர். அதேபோல் காயத்ரி யுவராஜூம் ரீல்ஸ் வீடியோக்களில் நடனமாடி ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது மேக்கப் மற்றும் புடவை விளம்பரத்திற்காக ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். பட்டுப்புடவையில் தக தகவென ஜொலிக்கும் இருவரும் ஒரே மாதிரியான மேக்கப்பில் ஒன்றாக நின்று ஒரே மாதிரி போஸ் கொடுத்துள்ளனர். இதனால் நெட்டிசன்கள் இந்த ரெண்டு அழகிகளில் யாருக்கு அழகி பட்டம் கொடுப்பது என குழம்பி வருகின்றனர்.