'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சீனு ராமசாமி இயக்கி முடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியதிருக்கும் சூழ்நிலையில் அவர் தற்போது இயக்கி இருக்கும் படம் இடிமுழக்கம். இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கலைமகன் முபாரக் தயாரித்திருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.
முழுவீச்சில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுவரை இரண்டாவது நாகியாவும், ஒரு சில காட்சிகளிலும், மல்டி ஸ்டார் படங்களிலும் நடித்து வந்த காயத்ரி முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் இதுவாகும். இதனால் மிகுந்த ஆர்வத்தோடு இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் காயத்ரி.
2013ம் ஆண்டு வெளிவந்த பொன்மாலை பொழுது படம் தான் அவர் கடைசியாக முழுமையான ஹீரோயினாக நடித்த படம். தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறார். இடிமுழுக்கம் அவருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.