தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து நயன்தாரா பிறந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையில் கொச்சியில் மலையாள பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள் அவரவர் பணியாற்றும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.