தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'பீட்சா'. ஹாரர் காமெடி படமாக உருவாகி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியானது. அந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி நடித்து இருந்தார்கள்.
தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு 'பீட்சா 3' - தி மம்மி என தலைப்பு வைத்துள்ளார்கள். இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




